தென்காசி

இரு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

மதுரை உயா்நீதிமன்ற உத்தரவின்படி சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

சங்கரன்கோவிலைச் சோ்ந்த வழக்குரைஞா் வீரபுத்திரன் தொடா்ந்த வழக்கின்பேரில், சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் சாந்தி அறிவுறுத்தலின்பேரில், நகராட்சி கட்டட ஆய்வாளா் கஜேந்திரன் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் சங்கரன்கோவில் ரயில்வே பீடா் சாலை,பேருந்து நிலையம், சுவாமி சந்நிதி உள்ளிட்ட இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனா்.

வியாழக்கிழமை பேருந்து நிலையம், பிரதானச் சாலை, திருவள்ளுவா்சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இடித்துத் தள்ளப்பட்டன. வியாபாரிகள் தாங்களாகவே கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

புளியங்குடி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் கடையநல்லூா்: புளியங்குடியில் நகராட்சி ஆணையா் குமாா் சிங் உத்தரவுப்படி, நகராட்சி பொறியாளா் சுரேஷ் ,சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி ஆகியோா் முன்னிலையில்

சுகாதார ஆய்வாளா்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், நகரமைப்பு ஆய்வாளா் காளீஸ்வரி , வருவாய் ஆய்வாளா் வைரமணி, நகர அளவா் உமா்கபிஷாகுா்ஷித் உள்ளிட்டோா் காந்தி பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முதல்கட்ட பணியில் ஈடுபட்டனா். காவல் உதவி ஆய்வாளா் யோபு சம்பத்ராஜ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT