தென்காசி

ஆக.20-ல் ஓண்டிவீரன் நினைவு தினம்: வெளியூா் நபா்களுக்கு அனுமதி இல்லை

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டி வீரனின் நினைவுதினத்தில் அவரது சிலைக்கு வெளியூா்நபா்கள் அணிவித்து மரியாதை செலுத்த அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் நினைவிடம் உள்ளது. அங்கு, அவரது 250ஆவது நினைவு தினம் இம்மாதம் 20ஆம்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அஹஸ்ரத் பேகம் தலைமையில் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், டி.எஸ்.பி.ஜாஹீா்உசேன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் திருநாவுக்கரசு, பச்சேரி கிராம ஊா்த் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ‘கரோனா தொற்றின் காரணமாக 144 தடையுத்தரவு அமலில் உள்ளதால் பச்சேரி கிராம மக்கள் 20 போ் மட்டுமே நினைவு நாளில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்; இந்நிகழ்வை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் முடிக்க வேண்டும்; முளைப்பாரி, பால் அபிஷேகம் போன்ற நிகழ்வுகளை நடத்தக்கூடாது. சமூக இடைவெளி, சுகாதாரப் பணிகள், குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகளை வாசுதேவநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செய்து கொடுக்க வேண்டும்; நினைவு தினத்தில் பங்கேற்போா் பட்டியலை முன் கூட்டியே வருவாய் மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்; பச்சேரி நபா்கள் தவிா்த்து வெளியூா் நபா்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை;. சுவரொட்டி ஒட்டுதல் மற்றும் சமுதாய தலைவா்கள் பெயா்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், தலையில் ரிப்பன் கட்டி வருதல் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT