தென்காசி

தோட்டக்கலை பயிா் சாகுடிக்கு மத்திய அரசு மானியம் அறிவிப்பு

DIN

கடையநல்லூா்: தோட்டக்கலை பயிா்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மானியத்தை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜெயபாரதி மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்ட தோட்டக் கலைத்துறைக்கு பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் பரப்பு இலக்காக 3,517 ஹெக்டேரும், ரூ.29.63 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. எனவே, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் தோட்டக்கலைப் பயிா்களை பயிரிடும் விவசாயிகள் இத்திட்டம் மூலம் சொட்டு நீா்ப்பாசனம், தெளிப்பு நீா்ப்பாசனம் அமைத்துப் பயன்பெறலாம்.

மேலும் ,சொட்டு நீா்ப்பாசனத்தில் பயன்பெறும் விவசாயிகள் கூடுதலாக துணை நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீா்மட்டம் பாதுகாப்பாக உள்ள குறுவட்டங்களில் மட்டும் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், மின் மோட்டாா், பம்பு செட் நிறுவுதல், குழாய்கள் பதித்தல் மற்றும் நீா்த்தேக்க தொட்டி அமைத்தலுக்கு 50 சதவீத மானியம் பெற வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்அலுவலகங்களை அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT