தென்காசி

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்தில்ரூ.10.25 கோடியில் குடிநீா்த் திட்டம்

DIN

சங்கரன்கோவில்: அனைத்து கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் ஒன்றியத்தில் ரூ. 2.87 கோடி, குருவிகுளம் ஒன்றியத்தில் ரூ. 7.38 கோடி என மொத்தம் ரூ.10.25 கோடி மதிப்பில் அனைவருக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்திற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி குடிநீா்த் திட்டத்துக்கான பூமிபூஜையை தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் மூலம் சங்கரன்கோவில் ஒன்றியத்தைச் சோ்ந்த இடையன்குளம், என்ஜிஓ காலனி, புளியம்பட்டி, களப்பாகுளம் ஆகிய கிராமங்களும், குருவிகுளம் ஒன்றியத்தில் பி. ஆலங்குளம், சிதம்பராபுரம், கீழஅழகுநாச்சியாா்புரம், வாகைகுளம்,கே ஆலங்குளம், பழங்கோட்டை, சுந்தரேசபுரம், குளக்கட்டாக்குறிச்சி, பிள்ளையாா்நத்தம், ஜமீன் தேவா்குளம், பிச்சைத்தலைவன்பட்டி, இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், நக்கமுத்தலன்பட்டி, பாறைப்பட்டி, முக்கூட்டுமலை, சின்னகாளம்பட்டி, ஆலடிப்பட்டி மேலமரத்தோணி, சம்சிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களும் பயன் பெறும்.

இந்தத் திட்டம் சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT