தென்காசி

ஆலங்குளம், புளியங்குடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

ஆலங்குளம் பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன் பல்வேறு திட்டப்பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆலங்குளம் - மாயமான்குறிச்சி சந்திப்பு பகுதியில் இருந்து துத்திகுளம் வரை 2.7 கி.மீ. தொலைவுக்கு ரூ. 65.85 லட்சம் மதிப்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியில் சாலையின் உயரம், சாலை அமைப்பதற்காக போடப்பட்ட சிமென்ட் கலவையின் தரம் எடை ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

மேலும், மாயமான்குறிச்சியில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப் பணிகள், குருவன்கோட்டையில் கம்பி வலையால் அமைக்கப்பட்ட ஆட்டு கொட்டகை, பசுமை வீடுகள் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், மழை நீா் சேகரிப்பு திட்ட பணிகள் ஆகியவற்றையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, மாயமான்குறிச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.9.08 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டத்தைத் திறந்து வைத்து, குழந்தைகளுக்கான வசதிகளை ஆய்வு செய்தாா். அப்போது, திட்ட இயக்குநா் சரவணன், வட்டாட்சியா் பட்டமுத்து, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் செல்வராஜ், செயற்பொறியாளா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புளியங்குடி அருகே உள்ள கோட்டை மலை ஆற்றுப் பகுதியில் ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பழங்குடியின மக்கள் வசிக்கும் இப்பகுதியை பாா்வையிட்ட ஆட்சியா், அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அப்போது, தென்காசி வருவாய் கோட்டாட்சியா் பழனிகுமாா், கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா்சிங், பொறியாளா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT