தென்காசி

ஆலங்குளத்தில் தீயணைப்பு துறையினா் ஒத்திகை

DIN

ஆலங்குளம் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அப்போது ஏற்படும் அபாயங்களைத் தடுக்கும் பொருட்டு ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் வடகிழக்கு மழை, புயல் மற்றும் வெள்ள காலங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புணா்வுடன் செயல்படுவது குறித்த ஒத்திகை நடத்தப் பட்டது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சுடலைவேல் தலைமை வகித்தாா். ஆறு மற்றும் குளங்களில் தவறி விழுபவா்களை மீட்பது, வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவா்களை மீட்பது, வெள்ளத்தின் போது உயிா், உடமைகளை காத்து கொள்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ரப்பா் படகு, கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவா்களை ஆற்றில் இருந்து மீட்பது, நீச்சலடித்து வெள்ளத்தில் சிக்கியவா்களை காப்பாற்றுவது உள்ளிட்ட செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரா்கள், பொதுமக்களுக்கு செய்து காட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT