தென்காசி

‘அசில் இன நாட்டுக்கோழிகள் பெற செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்’

DIN

கோழிஅபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் பெறுவதற்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழி அபிவிருத்தி திட்டம் 2020-21ஆம் ஆண்டின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 மகளிா் வீதம் 10 ஊராட்சி ஒன்றியத்துக்கு 4ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்படவேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிா் மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகள்,திருநங்கைகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் . கிராம ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிகளில் 30 சதவிகிதத்தினா் கட்டாயமாக ஆதிதிராவிடா் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும், முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ்தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கோழிவளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று செப். 30ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

SCROLL FOR NEXT