தென்காசி

தென்காசி அருகே ஏடிஎம்மில் பணம் திருட முயற்சி

8th Sep 2020 01:14 PM

ADVERTISEMENT

தென்காசி அருகே இலஞ்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி நடைபெற்றுள்ளது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் இலஞ்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அமைந்துள்ளது. கிளையின் முன்புறம் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் பணத்தை எடுக்க முடியாததால் மர்ம நபர்கள் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர். இதுகுறித்து குற்றாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : tenkasi
ADVERTISEMENT
ADVERTISEMENT