தென்காசி

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை தடுக்க ஆலோசனை

DIN

கடையநல்லூா் வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிா்களில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

கரடிகுளம் பகுதியில் சுமாா் 20 ஹெக்டோ் பரப்பில் மக்காச்சோளம் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடையநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் தலைமையில், வேளாண் அலுவலா் நஸ்ரின் முன்னிலையில், படைப்புழு கட்டுப்பாடு குறித்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறை குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்கமளித்தனா். படைப்புழு தாக்குதல் அதிகமாக இருந்தால், இமாமெக்டின் பென்சோயேட் 10 லிட்டருக்கு 4 கிராம், ஸ்பைனிடிரோம்(12சதவீதம்) 10 லிட்டருக்கு 5மி.லி. அல்லது குளோரண்டிலிபுரோல்(18.5 சதவீதம்) 10லிட்டருக்கு 4மி.லி. அல்லது நோவலுரான் 10 லிட்டருக்கு 15மி.லி. அளவில் தெளிக்கலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT