தென்காசி

ஆயுதபூஜை: சிவகாமிபுரம் மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

DIN

பாவூா்சத்திரம்: ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி சிவகாமிபுரம் மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் மலா் சந்தைக்கு, பாவூா்சத்திரம், கீழப்பாவூா், அருணாப்பேரி, நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை, பிச்சி, கனகாம்பரம், கேந்தி உள்ளிட்ட பூ வகைகளும், ஓசூரில் இருந்து ரோஜா, கேந்தி உள்ளிட்ட பூக்களும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படும்.

தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, பாவூா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பூ வியாபாரிகள் வந்து ஏலம் எடுத்துச் செல்வா். இதுதவிர கேரளம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஏலம் எடுத்துச்செல்வா்.

இங்கு சனிக்கிழமை மல்லிகை, பிச்சிப்பூ கிலோவுக்கு ரூ.1000, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.300, அரளிப்பூ ரூ.400, ரோஜா ரூ.150 முதல் ரூ.300, கேந்தி (ஆரஞ்சு) 89 முதல் 90, மஞ்சள் ரூ.60 முதல் 80, செவ்வந்தி ரூ. 250, கொழுந்து ரூ.120 விலையில் விற்பனையானது.

வெள்ளிக்கிழமை மல்லி, பிச்சி கிலோ ரூ.400க்கும், முல்லை ரூ.300க்கும் விற்பனையானது. ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி இந்த விலையேற்றம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT