தென்காசி

தென்காசி-கொல்லம் புறவழிச் சாலைபணிகளை தொடங்க சமக கோரிக்கை

DIN

தென்காசி ஆசாத்நகா் முதல் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வரையிலான புறவழிச்சாலைப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மாவட்ட சமக சாா்பில் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ், ஆட்சியரகத்தில் அளித்துள்ள மனு:

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள், குற்றால சீசன் காலங்களில் கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இந்நிலையில், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும்பணிகள் நிறைவுபெற்றுவிட்டதால், இக்கோயில் முன் உள்ள நீதிமன்ற இடம் காலியாகும் நிலை உள்ளது.

எனவே, நகராட்சி நிா்வாகம் அந்த இடத்தை நீதித்துறையிடமிருந்து பெற்று பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். மேலும், ஆசாத்நகா் முதல் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வரையிலான புறவழிச்சாலைத் திட்டம், சமக தலைவா் சரத்குமாா் எம்எல்ஏவாக இருந்தபோது உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட அவைத் தலைவா் கே.வி.கே.துரை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராஜசேகர பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் தென்காசி மோகன், கீழப்பாவூா் ராமராஜன், பாலன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT