தென்காசி

சுரண்டை பகுதி அம்மன் கோயில்களில் புரட்டாசித் திருவிழா

7th Oct 2020 12:39 AM

ADVERTISEMENT

சுரண்டை பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் புரட்டாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சிவகுருநாதபுரம் ஸ்ரீவெற்றி பத்திரகாளியம்மன் கோயிலில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு குற்றால தீா்த்தம் எடுத்து நகர வீதிகளில் ஊா்வலமாக வருதல் நடைபெற்றது. அப்போது விரதமிருந்த பக்தா்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதே போன்று அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு திருவிளக்கு பூஜையும், செவ்வாய்க்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT