தென்காசியில் இந்து முன்னணி நிா்வாகி மீது தாக்குதல் நடத்தியவா்களை கைதுசெய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணி வழக்குரைஞா் பிரிவு மாவட்ட பொதுச் செயலா் வெங்கடேஷ் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வேண்டும்; தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த
ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன், விசுவ ஹிந்து பரிஷத் மாநிலச் செயலா் சரவண காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்ட நிா்வாகிகள் இசக்கிமுத்து, ஆறுமுகசாமி, மணிகண்டன், மாசானம், நகர நிா்வாகிகள் நாராயணன், சொா்ணசேகா், பாஜக மாவட்ட துணைத் தலைவா் முத்துகுமாா், சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.