சுரண்டை: தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் சமீரன் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அலுவலக கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை, 6 மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு முதியோருக்கு ஓய்வூதிய ஆணை ஆகியவற்றை வழங்கினார்.
ஆய்வின்போது வட்டாட்சியர் முருகுசெல்வி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மகாலெட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் முருகம்மாள், மண்டல துணை வட்டாட்சியர் சிவன்பெருமாள், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
ADVERTISEMENT