தென்காசி

சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு சிறப்பு பேருந்து

10th Nov 2020 07:23 PM

ADVERTISEMENT

 

சுரண்டை: சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பி செல்வதற்கு சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் செயலர் சேர்மசெல்வம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது

சுரண்டையில் பகுதியைச் சேர்ந்த பலர் சென்னை மற்றும் கோவையில் கல்வி மற்றும் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கடந்த 6 ஆண்டுகளாக சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு தீபாவளி முடிந்த பிறகு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் சுரண்டை பகுதியைச் சேர்ந்தோர் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த வருடமும் சென்னை, கோவைக்கு சிறப்பு பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT