தென்காசி

சுரண்டையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

1st Nov 2020 07:13 PM

ADVERTISEMENT

 

சுரண்டை: சுரண்டையில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

சுரண்டை பேருந்து நிலைய சாலையில் 3 மாடிகள் கொண்ட புதிய வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக வெளியூரில் இருந்து வந்து தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கட்டடத்தின் லிப்ட் இயக்குவதற்காக கட்டப்பட்ட பகுதியில் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த ரா.ஆறுமுகம்(25) என்பவர் மாடியில் இருந்து தவறி விழுந்த இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

தகவலறிந்த சுரண்டை போலீஸôர் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT