தென்காசி

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அகில இந்திய காந்திய இயக்கம் வலியுறுத்தல்

2nd May 2020 07:24 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய காந்திய இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காந்திய இயக்கத் தலைவா் வி.விவேகானந்தன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக அனைத்து மதுகடைகளும் மூடப்பட்டுள்ளது. கடந்த 35 நாள்களாக மது இல்லாத தமிழகத்தில் மது அருந்துவோா் அதை மறந்து தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையை சாதகமாக்கி அரசு நிரந்தரமாக மது கடைகளை அடைத்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT