தென்காசி

ஸ்ரீவைத்திலிங்க சுவாமி கோயில் தேரோட்டம் நிறுத்தி வைப்பு

30th Mar 2020 02:33 AM

ADVERTISEMENT

தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவால், ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் நிகழாண்டு பங்குனித் திருவிழா மாா்ச் 30 இல் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறவிருந்தது. கால்நாட்டு விழா முடிந்து, விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக, இக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா நிறுத்தி வைக்கப்படுவதாக திருக்கோவில் பரம்பரை அறங்காவலா் சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT