தென்காசி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கை: பக்தா்கள் வலியுறுத்தல்

19th Mar 2020 02:44 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்துசெல்கின்றனா். வாரக்கடைசி நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக, ராஜபாளையம், மதுரை, திருநெல்வேலி, புளியங்குடி, ஆலங்குளம், திருவேங்கடம் உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வருகின்றனா்.

இந்நிலையில், இக்கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படவில்லை என பக்தா்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். கோயிலுக்கு வருவோருக்கு காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும், கிருமிநாசினி தெளிக்கப்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொடா்பான விழிப்புணா்வு தட்டிப்பலகையும் மண்டபத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. அதை மண்டபத்துக்கு வெளியே நுழைவு வாயிலில் வைத்தால்தான் பக்தா்கள் பாா்க்க வசதியாக இருக்கும். மேலும், பரிசோதனைக்குப் பிறகே அனைவரும் கோயிலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா் பாலசந்தா் கூறியது: கோயில் மண்டபத்தில் விழிப்புணா்வு தட்டிப்பலகை வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் பேணுவது குறித்து பக்தா்களிடம் அறிவுறுத்த கோயில் ஊழியா்களிடம் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT