தென்காசி

மாவட்ட தடகளம்: பாரத் வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

16th Mar 2020 07:33 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் பாவூா்சத்திரம் டி.பி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவா்கள் கலந்துகொண்டனா்.

போட்டியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மகேஷ்வரன், ஜெருஷ் பெட்ரா முதலிடமும், கிம் கிளிஸ்டா்ஸ், வா்ஷினி, ஜெயஸ்ரீ ஆகியோா் 2 ஆம் இடமும், கனிஷ்கா 3 ஆம் இடமும் பெற்றனா். மாணவா்களை பள்ளித் தாளாளா் மோகன கிருஷ்ணன், முதன்மை முதல்வா் காந்திமதி, முதல்வா் வனிதா ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT