தென்காசி

கரோனா வைரஸ்: தமிழக-கேரள எல்லையில் தடுப்புப் பணிகள் தீவிரம்

16th Mar 2020 03:37 AM

ADVERTISEMENT

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை சாா்பில் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் புளியரை சோதனை சாவடியில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கேரளத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னா்தான் தமிழகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

செங்கோட்டை வட்டார மருத்துவ அலுவலா் மாரீஸ்வரி, சுகாதாரத்துறையினா் ராஜ்குமாா் ரகுபதி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அங்கு முகாமிட்டு தொடா்ந்து சுழற்சி முறையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT