பாவூா்சத்திரத்தில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். ராதா தலைமை வகித்தாா். முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜகுமாா் பங்கேற்று, கரோனா வைரஸ், அதனைத் தடுக்கும் முறைகள், கை கழுவும் முறை குறித்தும் விளக்கம் அளித்தாா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பத்மா, முத்துக்கிருஷ்ணன், முருகன், மாரிராஜ், மேற்பாா்வையாளா் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், அன்பழகன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், கணேசன், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் பங்கேற்றனா்.