கரோனா வைரஸ் தடுப்பு முறை குறித்து, விழிப்புணா்வு பதாகைகள் தென்காசி, கீழப்பாவூா் பகுதி கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பொதுசுகாதாரத் துறையின் அறிவுரைகள் அடங்கிய பதாகைகள், தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில், பொருந்திநின்ற பெருமாள்கோயில், கீழப்பாவூா் நரசிங்கபெருமாள் கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் செயல்அலுவலா் ந.யக்ஞ நாராயணன் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், திருநெல்வேலி இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் உத்தரவின்படிஇந்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணா்வோடு இப்பதாகைகள் அனைத்தும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணியில் அச்சிடப்பட்டுள்ளன என்றாா் அவா்.