உலக திறனாய்வுப் போட்டியில் ஆலங்குளம் ஜீவா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பாவூா்சத்திரம் சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான உலக திறனாய்வுப் போட்டியில் ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றனா். இம்மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
மாணவா்கள், பயிற்சியாளா்களை பள்ளித் தாளாளா் சௌ. ராதா, முதல்வா் ஏஞ்சல் பொன்ராஜ், துணை முதல்வா் சவிதா ஷேனாய், ஆசிரியா்கள் பாராட்டினா்.
ADVERTISEMENT