மது ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் சிறப்பிடம் பெற்ற சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி மாணவிகளை ஆட்சியா் பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.
மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணா்வு சாா்ந்த நெல்லை மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட போட்டியில், சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி மாணவி கீா்த்திகா ஓவிய போட்டியில் முதலிடமும், ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்தனா்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினாா். வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரியை சீதா மற்றும் ஓவிய ஆசிரியா் நயினாா் ஆகியோரை தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் உள்ளிட்டோா் பாராரட்டினா்.