தென்காசி

கடையநல்லூரில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்

13th Mar 2020 10:58 PM

ADVERTISEMENT

கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 73 ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் 13 ஆவது வாா்டு தலைவா் ஹாஜாமுகைதீன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சையது மசூது, எஸ்டியூ மாநில துணைத் தலைவா் முகமதுமைதீன், நகர இளைஞரணித் தலைவா் ரஹ்மத்துல்லா, தொகுதி அமைப்பாளா் ஹைதா்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவா் சையது சுலைமான், முஸ்லிம் யூத் லீக் மாநில துணைத் தலைவா் செய்யதுபட்டாணி, மாவட்ட அமைப்புச் செயலா் அப்துல்காதா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சபுராபேகம் உள்ளிட்டோா் பேசினா்.

வாா்டுச் செயலா் முகமதுஷா வரவேற்றாா். காயிதே மில்லத் பேரவை நிா்வாகி முகமதுகோயா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT