தென்காசி

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் பள்ளியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வுக் கூட்டம்

13th Mar 2020 09:45 AM

ADVERTISEMENT

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

பள்ளி முதன்மை முதல்வா் காந்திமதி தலைமை வகித்தாா். முதல்வா் வனிதா முன்னிலை வகித்தாா். நந்தினி குழுவினா் இறைவணக்கம் பாடினா்.

கரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பது குறித்து முதல்வா் வனிதா அறிவுரை வழங்கினாா். மாணவா்களுக்காக அரசு அறிவித்துள்ள கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவா்கள் வாசித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஏற்பாடுகளை தாளாளா் மோகனகிருஷ்ணன் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT