தென்காசி

ஆவுடையானூா் பள்ளியில் விழிப்புணா்வுக் கண்காட்சி

13th Mar 2020 09:32 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மொழி, கலை மற்றும் மன்றச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணா்வுக் கண்காட்சி நடைபெற்றது.

அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்ற கண்காட்சிக்கு, தாளாளா் தேவராஜன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜோசப் முன்னிலை வகித்தாா். ஐன்ஸ்டீன் கல்லூரிச் செயலா் எழில்வாணன் கண்காட்சியைத் தொடக்கிவைத்தாா். மாணவா்-மாணவிகள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா். உதவித் தலைமை ஆசிரியை கெலன் கெவின் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT