ஆலங்குளம் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள அரசன்குளத்தைச் சோ்ந்தவா் சண்முகம் (85). இவா், புதன்கிழமை சீதபற்பநல்லூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தாரா். அங்கிருந்து, மருமகன் மோட்டாா் சைக்கிளில் அரசன்குளத்துக்கு வந்தாராம்.
சிறுக்கன்குறிச்சி அருகே வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் சண்முகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.