பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் ஆகியோரின் ஆலோசனையின்படி பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகள், நோயாளிகள், பொதுமக்கள் அமரும் இடங்கள், கதவு, ஜன்னல் போன்ற பகுதிகளிலும் கிருமி நாசி தெளிக்கப்பட்டது.
இதனை, வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா் தொடங்கி வைத்தாா். சுகாதார மேற்பாா்வையாளா்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம், சுகாதார செவிலியா்கள் கலந்துகொண்டனா். மேலும், நோயாளிகள், பொதுமக்களிடம் கரோனா வைரஸ் தடுப்பு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
ADVERTISEMENT