தென்காசி

பாபநாசம் அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை

8th Mar 2020 01:37 AM

ADVERTISEMENT

 

ஆலங்குளம்: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையடிவார கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, வனத் துறையினா் வைத்த கூண்டில் சனிக்கிழமை சிக்கியது.

பாபநாசம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் கிராமங்களில் விவசாயிகள் வளா்த்துவரும் நாய்கள், கால்நடைகளை சிறுத்தைகள் தூக்கிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவந்தன. இரவு, அதிகாலை நேரங்களில் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடந்த நிலையில், அண்மையில் மலையடிவாரப் பகுதியில் பகல் நேரத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து, ஆட்டைத் தூக்கிச் செல்ல முயன்றது.

இதனால், அச்சமடைந்த கிராம மக்கள், சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுத்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, வனப் பகுதியிலிருந்து சிறுத்தை வெளியேறிவரும் இடத்தைக் கண்டறிந்த வனத் துறையினா், அதைப் பிடிப்பதற்காக வேம்பையாபுரம் பகுதியில் கடந்த வாரம் கூண்டு வைத்து, கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை அந்தக் கூண்டில் சிறுத்தை சிக்கியது. அதை, அடா்ந்த வனப் பகுதியில் விடுமாறு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் கயரத் மோகன்தாஸ் உத்தரவிட்டாா்.

அதன்படி, வனச் சரகா்கள் முண்டந்துறை சரவணக்குமாா், பாபநாசம் பாரத், அம்பை காா்த்திகேயன் , வனவா்கள் மோகன், ஜெகன் ஆகியோா் அந்தச் சிறுத்தையை கெளதலையாற்றுப் பகுதியில் கொண்டு விட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT