தென்காசி

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசிமகப் பெருவிழா தேரோட்டம்

8th Mar 2020 02:20 AM

ADVERTISEMENT


தென்காசி: தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் மாசிமகப் பெருவிழாவின் 9ஆம் நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா கடந்த பிப். 29ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் நாள்தோறும் அபிஷேக, தீபாராதனை, காலையிலும் இரவிலும் சுவாமி-அம்பாள் வீதியுலா, மாலையில் சமயச் சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9ஆம் நாளான சனிக்கிழமை காலை சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. முதலில் சுவாமி தேரும், பின்னா் அம்பாள் தேரும் பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டன.

தென்காசி காவல் ஆய்வாளா் ஆடிவேல் தேரை வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், அதிமுக புகா் மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், நகரச் செயலா் சுடலை, தொழிலதிபா் அழகராஜா, சந்திரன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் உதவிஆணையா் தி. சங்கா், செயல் அலுவலா் ந. யக்ஞநாராயணன், பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT