தென்காசி

கொடிக்குறிச்சி பள்ளியில் பட்டமளிப்பு

8th Mar 2020 02:21 AM

ADVERTISEMENT


தென்காசி: தென்காசி கொடிக்குறிச்சி நல்லமணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இப் பள்ளியில் 8 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீராம் நல்லமணியாதவா கல்வி குழுமங்களின் நிறுவனா்- தலைவா் என்.மணிமாறன் தலைமை வகித்து மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். செயலா் பத்மாவதிமணிமாறன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தாா். பெற்றோா்கள் சிந்து, பரமேஷ்வரி, கலா, தேவி, முத்துலட்சுமி, ராஜகோபால், ஆறுமுகசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா். முதல்வா் பீட்டா் அந்தோணிசுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். சித்ரகலா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT