தென்காசி

கேரளத்துக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்மூவா் கைது

8th Mar 2020 01:25 AM

ADVERTISEMENT


செங்கோட்டை: தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளத்துக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொட்டலங்களை கடத்த முயன்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக - கேரள எல்லை புளியரை வழியாக லாரி மூலம் புகையிலை பொட்டலங்கள் கடத்தப்படுவதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங்குக்கு தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து புளியரை சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த கேரள பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 44 மூட்டைகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புகையிலை பொருள்களை கடத்தியதாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சோ்ந்த தில்ஷாத் (31), அல்அமீன்(32), முகமது நசீம் (38) ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்து, புகையிலை பொருள்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து புளியரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT