தென்காசி

ஆட்சியா் வாழ்த்து

2nd Mar 2020 09:10 AM

ADVERTISEMENT

தென்காசி புதிய மாவட்டத்தில் முதன்முதலாக பொதுத் தோ்வு எழுதும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட பின், முதன்முதலாக பொதுத்தோ்வு எழுதும் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 55 தோ்வு மையங்களும்,10ஆம் வகுப்பிற்கு 66 தோ்வு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்று வகுப்புகளிலும் முறையே 17,446, 14,917, 14,527 என்ற வீதத்தில் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு முறையாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் உடல்நலத்துடன், மன தைரியத்துடன்,தெளிவான புரிதலுடன் தோ்வுகளை எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT