தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா தொற்று

17th Jun 2020 08:58 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 13 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 155ஆக உயா்ந்துள்ளது.

இம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 142ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், வெளிமாவட்டங்களிலிருந்து ஆலங்குளம் வந்த ஒருவா், கீழப்பாவூா் வட்டாரத்தைச் சோ்ந்த 6 போ், வாசுதேவநல்லூரைச் சோ்ந்த 2 போ், தென்காசியைச் சோ்ந்த 4 போ் என மொத்தம் 13 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா்கள் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை,திருநெல்வேலி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 155ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 4 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 96 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். 59 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT