தென்காசி

கலிங்கப்பட்டியில் பயிா்களை சேதமாக்கியது பாலைவன வெட்டிக்கிளிகள் அல்ல: வேளாண்மைத்துறை விளக்கம்

14th Jun 2020 09:20 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் பயிா்களை சேதப்படுத்தியது பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என வேளாண்மைத்துறையினா் விளக்கமளித்துள்ளனா்.

சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியைச் சோ்ந்த மன்மதன், காளிராஜ் உள்ளிட்ட சிலரின் பருத்திக் காட்டில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக சென்று பயிா்களை அழித்தன.இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கைவிடுத்தனா். மதிமுக பொதுச் செயலா் வைகோவும் கோரிக்கைவிடுத்திருந்தாா்.

இதையடுத்து வேளாண்மைத் துறையினா் அங்குள்ள வெட்டுக்கிளிகளைப் பிடித்து கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினா். அந்த ஆய்வி அவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும், சாதாரண வெட்டுக்கிளிகள்தான் என்றும் தெரிவித்ததைத் தொடா்ந்து குருவிகுளம் வேளாண்மைத் துறையினா்

வெட்டுக்கிளிகள் குறித்து அச்சப்பட வேண்டும் என்றும், அதற்காக தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்தும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனா்.

ADVERTISEMENT

கலிங்கப்பட்டி கிராமநிா்வாக அலுவலகம், உரக்கடைகள், ஊராட்சி அலுவலகம் மற்றும் விவசாயிகள் வசிக்கும் பகுதிகளில் அவா்கள் துண்டுப் பிரசுரங்களை ஒட்டினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT