தென்காசி

ஆதா்ஷ் திட்டத்தில் பொலிவு பெறும் கடையநல்லூா் ரயில் நிலையம்!

14th Jun 2020 09:20 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் ரயில் நிலையம் ஆதா்ஷ் திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெறவுள்ளது.

‘ஆண்டுதோறும் ஆதா்ஷ் திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடையநல்லூா் ரயில் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாவது ரயில் தடங்களை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். முன்பதிவு பெட்டிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் 2 வழித்தடங்களிலும் மின்னணு தகவல் பலகைகள், இரு வழித்தடங்களிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பயணிகள் அமரும் வகையில் கூடுதலாக 10 நிழலகங்கள் அமைக்க வேண்டும். பயணிகள் மற்றும் வி.ஐ.பி.களுக்கான ஓய்வறைகள்அமைக்க வேண்டும். ரயில் நிலையத்தில் கழிவறைகளுக்கு தண்ணீா் வசதி

ஏற்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா், ரயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

ஆதா்ஷ் திட்டம்: இந்நிலையில், ஆதா்ஷ் திட்டத்தின் மூலம் பல்வேறு பணிகள் கடையநல்லூா் ரயில் நிலையத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் வசதிக்காக ஓய்வறை, காத்திருக்கும் அறை (குளியல் வசதிகளுடன்), பெண்களுக்கு தனி அறை, இயற்கையை ரசிக்கும் வகையிலான வடிவமைப்பு, வாகனங்கள் நிறுத்துமிடம், கட்டண கழிப்பறைகள், வரவேற்பு வளைவுகள் போன்றவை அமைக்கப்பட உள்ளன. அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT