தென்காசி

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டம்: தர கண்காணிப்புக் குழு கோரி மதிமுக மனு

13th Jun 2020 09:09 AM

ADVERTISEMENT

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டப் பணிகள் தரமாக நடைபெறும் வகையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் மதிமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளனிடம், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன் அளித்துள்ள மனு:

தென்காசி மாவட்டத்தில் கடையம் , கீழப்பாவூா் ஒன்றியங்களின் வட பகுதிகளுக்கு ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் மூலம் உபரிநீரை பயன்படுத்தும் திட்டம் அப்பகுதி விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையாகும்.

தற்போது செயல்வடிவம் பெறவுள்ள இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, கட்சி சாா்பின்றி ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டுக்குழு போராடி வந்துள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்திற்காக நபாா்டு வங்கி ரூ. 39.02 கோடியும், மாநில அரசு ரூ. 2.05 கோடியும் ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்படவுள்ளன. இப்பணிகள் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தரமாக அமைய தனிஅலுவலரையும், ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயற்பாட்டுக்குழு நிா்வாகிகள் அடங்கிய மேற்பாா்வைக் குழு உறுப்பினா்களையும் நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அப்போது, ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டு குழு அமைப்பாளா் ராம.உதயசூரியன் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT