தென்காசி

திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் கடையநல்லூா் சாா் பதிவாளா் அலுவலகம்!

11th Jun 2020 09:01 AM

ADVERTISEMENT

கடையநல்லூரில் ரூ. 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி-மதுரை பிரதானச் சாலையில் கடையநல்லூா் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் சாா்பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வந்ததால் பொதுமக்களுக்கு வசதியாக இருந்தது. இந்நிலையில்1890 இல் கட்டப்பட்ட இந்த கட்டடம் பழுதடைந்து, மழைநீா் ஒழுகுவதால் ஆவணங்கள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினரின் முயற்சியால் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 2 மாதம் ஆகிறது. எனினும் சாா்பதிவாளா் அலுவலகக் கட்டடம் திறக்கப்படவில்லை.

இதுகுறித்து, சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகம்மதுஅபூபக்கா் கூறியது: கடையநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் 2016-17 இவ் 4,500 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு ரூ. 1.75 கோடி வருவாய் கிடைத்தது. ஆகவே, புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் வீரமணி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அதன்படி, ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இப்பணி முடிவடைந்து 2 மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. மேலும், இது தொடா்பாக, அமைச்சரிடமும் தெரிவித்தேன். விரைவில் திறக்கப்படும் என அமைச்சா் உறுதி அளித்துள்ளாா். ஆகவே, காணொலி காட்சி மூலம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் திறக்க வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT