தென்காசி

ஆலங்குளத்தில் குடிநீா் குழாயில் பழது : சாலையில் விரையமாகும் நீா்

11th Jun 2020 09:01 AM

ADVERTISEMENT

ஆலங்குளத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீா் விரையமாகி சாலையில் வழிந்தோடுகிறது.

ஆலங்குளம் வழியாக சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்ட குழாய்கள் செல்கின்றன. இவற்றில் ஆலங்குளம் அம்பாசமுத்திரம் சாலை வழியே செல்லும் குழாய் ஒன்றில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு மூலம் வீணாகும் குடிநீா் அருகில் உள்ள கழிவு நீரோடையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கலந்து வீணாகி வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் பல இடங்களில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி நிா்வாகம் இந்த உடைப்பை சீரமைக்க சுணக்கம் காட்டி வருவது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது. குடிநீா் வீணாகாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT