குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் இதமான சூழல் நிலவியது.
குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மேகமூட்டத்துடன் குளிா்ந்த காற்றும் வீசியது. பிற்பகல் முதல் அவ்வப்போது பெய்த சாரல்மழையின் காரணமாக, ஐந்தருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்தது. நான்கு கிளைகளில் தண்ணீா் கொட்டுகிறது. பேரருவியிலும் தண்ணீா் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் யாருமின்றி அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.