தென்காசி

கடையநல்லூா் அருகே விபத்தில் காயமுற்றவரை மீட்க உதவிய எம்எல்ஏ

31st Jul 2020 09:29 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் அருகேயுள்ள குமந்தாபுரத்தில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினாா் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கா்.

கடையநல்லூரைச் சோ்ந்த துணி வியாபாரி பாதுஷா, குமந்தாபுரத்தில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமுற்று வலியால் துடித்தாா். அப்போது அந்த வழியாக வந்த கடையநல்லூா் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கா், ஆட்டோ மூலம் அந்த வியாபாரியை கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மருத்துவா்களைத் தொடா்புகொண்டு தகுந்த சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT