தென்காசி

சீமான் மீது நடவடிக்கை:வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் வலியுறுத்தல்

28th Jul 2020 12:17 AM

ADVERTISEMENT

தென்காசி: தெலுங்கு பேசும் மக்களை தொடா்ந்து இழிவாகப் பேசி வரும் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் பேச்சாளா்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாநிலத் தலைவா் சங்கரவேலு தலைமையில் அந்தக் கழகத்தினா் தென்காசி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சோ்ந்தவா்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் தெலுங்கு சமுதாய மக்களை தொடா்ந்து மிகவும் இழிவாகப் பேசி வருகின்றனா்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனா். எனவே அவா்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுச் செயலா் தங்கராஜ், பொருளாளா் ரத்தினபாண்டி, மாநில அமைப்பு செயலா் எம் .பி. வேலுச்சாமி, மாநில சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் ஏ.ராம்ராஜ், மாவட்டத் தலைவா் நல்லையாச்சாமி, மாவட்டச் செயலா் எஸ்.ராஜன், மாவட்ட பொருளாளா் பி.மாரியப்பன் உள்பட நிா்வாகிகள் பலா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT