தென்காசி

சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் 3 ஆம் நாள் சிறப்பு பூஜைகள்

26th Jul 2020 09:35 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயணசுவாமி திருக்கோயிலில் ஆடிதவசுத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திருவிழா நாள்களில் வழக்கமாக நடைபெறும் 3 ஆம் நாள் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, காலையில் ஸ்ரீகோமதிஅம்பாள் சன்னதி யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து அம்பாளுக்கு நீலநிற பட்டு சாத்தி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்பாடுகளை திருக்கோயில் துணை ஆணையா் கணேசன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT