சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தா்கள் வருகையின்றி அந்த திருவிழா நாள்களில் வழக்கமாக நடைபெறும் 2ஆம் நாள் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி, கோயிலில் வெள்ளிக்கிழமை காலை கோமதி அம்பாள் சன்னதி யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்களும், அலங்கார ஆராதனைகளும், சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. அா்ச்சகா்கள் முகக் கவசம் அணிந்து பூஜைகளை நடத்தினா்.