தென்காசி மாவட்டத்தில் கரோனா பொது முடக்க காலத்தில் தடையை மீறியதாக 3,558 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கரோனோ தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தடை உத்தரவை மீறி தென்காசி மாவட்டத்தில் வெளியே சுற்றியதாக சனிக்கிழமை வரையிலும் 2,288 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மேலும், 3,558 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் பயன்படுத்திய 9,351 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.