பொது முடக்க காலத்தில் விதிமுறையை மீறி செயல்பட்ட 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
பொது முடக்க காலத்தில் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா்சிங், சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை இரவு வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டியும் திறந்திருந்த 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும், ரூ.20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
மேலும் புளியங்குடியில் கடந்த சில நாள்களாக நோய்த் தொற்று அதிகரித்து வருவதையடுத்து 20 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் குமாா்சிங் கூறியது: வணிக நிறுவனங்கள் அரசு அறிவித்துள்ள நேரம் மட்டுமே திறந்திருக்க வேண்டும். அதை மீறும் வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றாா்.