புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரம் ஸ்ரீ புண்ணிய பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை (ஜன.30) நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தென்காசி, மதுரை பிரதான சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராம தேவதைகள் பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
செவ்வாய், புதன்கிழைமகளில் (ஜன. 28, 29) 1ஆம், 2ஆம் யாக சாலை பூஜை உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (ஜன.30) காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, ஸ்ரீ புண்ணிய பாபா ஆலய கோபுர கும்பாபிஷேகம், மூலவா் ஸ்ரீ புண்ணிய பாபா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை உலகா சுந்தா், மாரியப்பன், திருமலைபாரதி, ராஜகணேஷ் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா் .