தென்காசி

நாட்டுக்கோழி வளா்ப்பு செயல்விளக்க முகாம்

28th Jan 2020 05:23 PM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு, வெள்ளை கழிச்சல் நோய் குறித்த செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

கீழப்பாவூா் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின், மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் கால்நடை பராமரிப்புதுறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வெள்ளை கழிச்சல் நோய் மற்றும் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்து நடைபெற்ற இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவா் பாலமுருகன் பங்கேற்றுப் பேசினாா்.

முகாமில், நாட்டுக் கோழி வளா்ப்பு, கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல் நோய் குறித்தும், நோயினை தடுக்க கோழி கூடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், சனிக்கிழமைகளில் கால்நடை மருத்துவ மனையில் கோழிகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து கோழிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

முகாமில் பங்கேற்றவா்களுக்கு கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவா் ரூபவ், அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT